பிணைமுறி விசாரணை அறிக்கையில் 103 பக்கங்களை காணவில்லை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான நீதிபதி கே.ரி.சித்ரசிறி தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையின் 103 பக்கங்கள் காணாமல் போயிருப்பதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி செயலகம் இந்த அறிக்கையை இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 1154 பக்கங்களே உள்ளன. ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 3 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது, ஆணைக்குழுவின் அறிக்கை 1257 பக்கங்களில் இருப்பதாக கூறியிருந்தார்.

எனவே காணமல் போயுள்ள 103 பக்கங்கள் தொடர்பாக ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும். முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பான பக்கங்களே காணாமல் போயிருக்கக் கூடும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.