பிணைமுறியால் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் வரலாம் – மஹிந்த

மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மரண அச்சுறுத்தல் வரக்கூடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பிணைமுறி மோசடி அறிக்கையில் வெளியான தகவல்கள் காரணமாக இந்த அச்சுறுத்தல் வரக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிதி மோசடி தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்ட இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இடம்பிடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]