பிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி?

விஸ்வாசம் படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 125 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதால் அஜித் ரசிகர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கின்றார்.

இப்படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் பாலிவுட்டின் ஹிட் படமான பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித்  நடிக்க உள்ளார்.  படத்தின் படப்பிடிப்பு இம்மாத கடைசியில் அல்லது அடுத்த மாதம் ஆரம்பத்தில் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் பாலிவுட் நாயகி வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் அவருக்கு ரீமேக் படத்தில் நடிக்க பிடிக்காதாம், முதலில் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிய வித்யா பாலன் பின் போனி கபூர் கேட்டுக் கொண்டதால் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]