பிஜி கடற்பரப்பு நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்தில்லை

பிஜி கடற்பரப்பு நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்தில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

பிஜி தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

குறித்த நிலநடுக்கமானது, 8.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதோடு, இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த நிலநடுக்கத்தால், இலங்கைக்கு எவ்விதமான ஆபத்துமில்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]