தலைவிக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை வென்றவர் நடிகை ஓவியா.

ஓவியாவிற்கும் ஆரவ்விற்கும் இடையில் பிக் பாஸ் வீட்டில் காதல் மலர்ந்து, வீட்டில் இருந்த பிரபலங்களால் மலர்ந்த காதல் மங்கியது.

இந்த நிலையில் ஓவியா எதிர்காலத்தைப் பற்றி முன்கூட்டியே திட்டமிடுவது இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

“இந்த வருஷம் முழுக்க இப்படி இருக்கணும். அடுத்த வருஷத்துல இதை வாங்கணும்னு எல்லாம் முன்கூட்டியே பிளான் பண்ண மாட்டேன். இன்னைக்கு சந்தோஷமா இருக்கேனா, அதுதான் முக்கியம்.” என தெரிவித்துள்ளார்.

ஓவியா

“திருமணம் பற்றி எந்த திட்டமும் கிடையாது எனவும், தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் , திருமணம் செய்வது ரொம்ப, ரொம்ப கஷ்டமான விடயம், எனக்கு திருமணம் மீது நம்பிக்கை இல்லை” எனவும் ஓவியா குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]