முகப்பு Cinema பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் சண்டை- கெட்ட வார்த்தையில் திட்டிய மஹத்தால் கண்ணீர்விட்டழுத பாலாஜி

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் சண்டை- கெட்ட வார்த்தையில் திட்டிய மஹத்தால் கண்ணீர்விட்டழுத பாலாஜி

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ள மஹத் மீது மக்களுக்கு நாளுக்கு நாள் வெறுப்பு அதிகரித்து கொண்டே போகிறது. ஏற்கனவே பெண்களிடம் அத்து மீறி நடக்கும் மஹத்,சமீபத்தில் பாலாஜியிடன் சண்டையிட்டு ரசிகர்களின் வெறுப்பை மேலும் சம்பாதித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போலீஸ், திருடன், பொது மக்கள் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போலீசாக உள்ள மஹத் திருடர்களாக இருக்கும் யாஷிகா, ஐஸ்வர்யா, டேனி போன்றவர்களுக்கு தான் ஆதரவாக இருக்கிறார் என்று முதலில் ஒரு சிறு பிரச்சனை துவங்கியது.

மஹத்திற்கு போலீஸ் வேடம் கொடுத்தாலும் கொடுத்தார்கள் அவர் உண்மையாகவே நிஜ போலீசாக மாறி அனைவரிடமும் அதிகாரம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் மஹத் ஒரு ஆப்பிளை எடுத்து உன்ன அதற்கு பாலாஜி டஸ்கனின்படி காசு கொடுத்தானே உணவை வாங்க வேண்டும் என்று கூறினார். அதற்கு மஹத் முடியாத என்று திமிராக கூற டென்ஷனான பாலாஜி, மஹத்தை ‘பிச்சை எடுத்து சாப்பிடு என்றார்.

அப்போது எதுவும் சொல்லாமல் இருந்த மஹத் பின்னர் சிறிது நேரம் கழித்து பாலாஜியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அவரை ஜோக்கர் என்றும் காமெடி தலையா என்றும் திட்டியுள்ளார். பின்னர் சிறுது நேரம் கழித்து பாலாஜியிடம் சென்று காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டார் மஹத். ஆனால், பாலாஜி பதிலுக்கு எதுவும் பேசாமல் வயதுக்கு மரியாதை கொடுக்காமல் மஹத் பேசியது நினைத்து அழுது கொண்டிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com