பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ப்ரியா பவானிசங்கர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டிற்கு இந்த வாரம் ஒரு பிரபல நடிகை கலந்து கொள்ளப் போகிறாராம். பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவலையில் உள்ளனர், காரணம் ஓவியா. ஓவியா வெளியேறிய பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இந்நிலையில் தான் புது நடிகை ஒருவரை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வரப் போகிறார்களாம்.

விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த நந்திதா ஸ்வேதா வரும் 15ம் திகதி பிக் பாஸ் வீட்டிற்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது. நந்திதா வந்தால் மட்டும் டிஆர்பி ஏறிடுமா என்று தெரியவில்லை.

பிக் பாஸ் வீட்டிற்கு

கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் புகழ் ப்ரியா பவானிசங்கர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. வரப்போவது நந்திதாவா, ப்ரியாவா என்பது 15ம் திகதி தெரியும்.

ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வரும் முயற்சியிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளார்களாம். ஓவியா வரவை எதிர்பார்த்து இருக்கிறது ஓவியா ஆர்மி.

பிக் பாஸ் வீட்டிற்கு யார் வந்தாலும் ஓவியா அளவுக்கு இருக்க முடியாது. அதனால் நிகழ்ச்சி ப்ளாப் ஆனது ப்ளாப் தான் என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் கூறி வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]