பிக் பாஸ் டைட்டில் வின்னராக ரித்விகா தெரிவு- ஆனந்தத்தில் துள்ளகுதிக்கும் வீடியோ உள்ளே

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளராக பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா தெரிவாகியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஜூ்ன் மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பட்டது. மொத்தம் 16 போட்டியாளர்களை கொண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. பல்வேறு சண்டைகள், சர்ச்சைகளைத் தாண்டி இறுதிச்சுற்று போட்டியாளராக ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, விஜி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்பது தான் விதி. ஆனால் இந்த சீசனில் சில நாட்கள் நீடிக்கப்பட்டது. தொடர்ந்து மக்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களித்து வந்தனர்.

ஓட்டு ஆரம்பித்த முதலில் இருந்தே ரித்விகா தான் முன்னிலையில் இருந்தார். இரண்டாவது இடத்தில் ஐஸ்வர்யா, மூன்றாவது இடத்தில் விஜி மற்றும் கடைசியாக ஜனனி இருந்தார். இதையடுத்து கடந்த இரு தினங்கள் நிகழ்ச்சியின் ஃபினாலேவாகும். முதல் நாள் ஜனனி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நேற்று கடைசி நிலைக்கு தேர்வாகிய ரித்விகா, ஐஸ்வர்யா இருவரில் போட்டியின் வெற்றியாளர் யார் என்பது குறித்து கமல் அறிவித்தார். ரித்விகா தான் வெற்றியாளர் என்று கமல் ரித்விகாவின் கையை உயர்த்தியதும், ஆனந்தத்தில் துள்ளி குதித்து அழுதார் ரித்விகா.

இதையடுத்து பேசிய அவர், வாழ்க்கையில் முழுமையான வெற்றியை முதன்முதலில் அனுபவிக்கிறேன். முகம் தெரியாதா எத்தனையோ பேர் எனக்காக ஓட்டு போட்டுள்ளீர்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் மிக்க நன்றி. இங்குள்ள அத்தனை ஹவுஸ்மேட்டுடனும் போட்டி போட்டு விளையாடியுள்ளேன். இந்த டிராப்பியை அவர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

வாழ்க்கையோ, போட்டியோ நம்பிக்கையுடன் ஆரோக்கியமாக போட்டிப் போடுங்கள். வெற்றி உங்களை தேடி வரும். கமல் சார் நீங்கள் தான் என் வாழ்ககைக்கு இன்ஸ்பிரேஷன் என்று கூறினார். இதையடுத்து அவருக்கு நிகழ்ச்சியின் பரிசுத்தொகையை வழங்கினார் கமல்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]