பிக் பாஷ் கிரிக்கெட் தொடரின் போது திடீரென மைதானத்திற்கு வந்த ஜூனியர் வாட்சனின் வீடியோ,தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ்.தற்போது 8 -வது சீசனாக நடைபெறும் இந்த போட்டிகளின் போது,விறுவிறுப்பிற்கும்,பரபரப்பிற்கு பஞ்சமே இருக்காது.அது போன்ற ஒரு சுவாரசியமான சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது.
`சிட்னி தண்டர்’ அணியின் கேப்டனான ஷேன் வாட்சன், அடிலெய்டு அணிக்கு எதிரானப் போட்டியின் போது விறுவிறுப்பாக ஆடிக்கொண்டிருந்தார்.அப்போது அவர் 40 பந்துகளில் 68 ரன்கள் குவித்திருந்தார். இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில்,திடீரென வாட்சனின் மகன் களத்துக்குள் வர மைதானத்தில் இருந்த ரசிகர்கள் படு உற்சாகத்தோடு ஆரவாரம் செய்தார்கள்.
வாட்சனை நோக்கி வந்த ஜூனியர் வாட்சன் தன்னிடமிருந்த தொப்பியிலும்,தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டிலும் வாட்சனிடம் ஆட்டோகிராப் வாங்கி கொண்டார்.பின்னர் மகனை மைதானத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார் வாட்சன்.’தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்,தந்தையின் அன்பின் முன்னே’ என்ற பாடல் வரியோடு இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் ரீ -ட்வீட் செய்திருந்தது.
ட்விட்டரில் வைரலான இந்த வீடியோ,நிச்சயம் ஒரு ‘ஸ்வீட் அண்டு பெஸ்ட் மொமெண்ட்’ தான்.
A moment to remember for Shane Watson and his son Will! ❤ #BBL08 pic.twitter.com/7rIdF7iqWv
— KFC Big Bash League (@BBL) January 13, 2019
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]