முகப்பு Cinema பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரியும் மகத்தின் காதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரியும் மகத்தின் காதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள மகத், தற்போது யாஷிகாவை காதலிப்பதாகவும், தனக்காக ஒரு பெண் வெளியில் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த காதல் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்ற நிலையில், மகத்தின் முன்னாள் காதலி பிராச்சி மிஸ்ராவிடம் சமூக வலைத்தளங்கள் பல கேள்விகளை கேட்க ஆரம்பித்துள்ளது.

இதற்கு பதிலளித்து வரும் மிஸ்ரா… ‘நான் காதலித்த மகத்தை பிக்போஸ் வீட்டுக்கு நம்பிக்கையுடன் அனுப்பி வைத்தேன். பிக்போஸ் முடிந்தவுடன் எங்கள் வாழ்க்கையை திட்டமிட முடிவு செய்தோம்.

ஆனால் அவர் யாஷிகா  காதலிப்பது தெரிவிந்து விட்டதால், இனியும் நான் அவரை காதலிப்பது பொறுத்தமாக இருக்காது.

அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்தவுடன் அவரை நேரில் சந்தித்து பேசவுள்ளேன்’ என கூறியுள்ளார்.

மேலும் இது எனது தனிப்பட்ட பிரச்சினை என கூறியுள்ள அவர், இந்த பிரச்சினையை எப்படி கையாள்வது, இதிலிருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

இனியும் இந்த பிரச்சினை குறித்து யாரும் தயவு செய்து பேச வேண்டாம். எனது அக்கறையில், பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com