பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பு திகதி அறிவிப்பு

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் ஓவியா மக்களின் மனதை கவர்ந்தார். இதில் இடம்பெற்ற ஜூலி, ரைசா, ஹரிஸ் உள்ளிட்ட பலருக்கு படங்களில் நடிக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தன.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனையும் நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இதற்கான விளம்பர வேலைகள் நடந்து வருவதோடு, புரமோவும் வெளியானது. நடிகர் கமல் நேரடியாக அரசியலில் களமிறங்கிவிட்ட நிலையில் அவரின் கருத்துக்களை கூறவும் ஒரு மேடை, நிகழ்ச்சி கிடைத்ததாக தான் பார்க்கப்படுகிறது.

வருகிற ஜூன் 17ம் தேதி முதல் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]