பிக்பாஸ் 2 சீசன் குறித்து ராய் லட்சுமி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் 2 சீசன் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் 2 தொடங்கவுள்ளது. வரும் 17ம் தேதி தொடங்கும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கயிருக்கிறார். அதற்கான புரோமோ நிகழ்ச்சிகளும் வந்து கொண்டேயிருக்கிறது.

இந்த நிலையில், முதல் சீசனில் வந்த வதந்தியைப் போன்றும் இந்த சீசனில் நடிகை ராய் லட்சுமி கலந்து கொள்வார் என்று வதந்தி பரவி வருகிறது. இது குறித்து அவர் கூறுகையில், தொடர்ந்து இது போன்ற வரும் தகவல்களுக்கு டுவீட் செய்து டுவீட் செய்து நான் அசந்துபோய்விட்டேன். நான், இந்த தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]