பிக்பாஸ் வீட்டுக்குள் ராணா?

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கான வீடு பூனே அருகே லோனா வாலா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் தினத்தன்று இந்த வீட்டுக்குள் ராணா சென்றார். அவரது திடீர் வருகை போட்டியாளர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

ராணா நடித்துள்ள ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ படத்தை பிரபலப்படுத்துவதற்காக ராணா இந்த வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த படத்தில் வருவது போன்றே வேட்டி அணிந்து சென்றார். அங்குள்ளவர்களுடன் உரையாடிய அவர், நண்பர்கள் தினத்தை அவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

பின்னர் பிக்பாஸ் வீட்டை சுற்றிபார்த்த ராணா, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜுனியர் என்.டி.ஆர். சிறப்பாக நிகழ்ச்சியை தொகுப்பதாக கூறி பாராட்டினார். அன்றைய தினம் வீட்டை விட்டு வெளியேறியவரின் பெயரையும் அறிவித்தார்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி போன்று தெலுங்கு நிகழ்ச்சியிலும் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக ராணா தெலுங்கு பிக்பாஸ் வீட்டில் ஒரு சில மணிநேரம் இருக்க ஏற்பாடு செய்து இருந்தனர்.

இது போல் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தமிழ்பட உலகின் முன்னணி நடிகர் அல்லது நடிகையை ஒருசில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]