பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கஜினிகாந் படக்குழுவினர்- வீடியோ உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிக்பாஸ் 2 வின் பதினாறு போட்டியாளர்களில் மமதி சாரி, அனந்த் வைத்தியநாதன், ரம்யா, நித்யா உள்ளிட்டோர் எலிமினேட் ஆகி வெளியேறினர்.

அதேபோல் வைஷ்ணவி போன வாரம் எலிமினேட் ஆகி சீக்ரட் ரூம்முக்குள் அடைத்து வைக்கப்பட்டு நேற்று மீண்டும் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டார்.

இந்த வார சர்வாதிகாரி டாஸ்க் பார்வையாளர்கள் மத்தியில் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் ‘கஜினிகாந்த்’ படக்குழு வருகை தந்துள்ளது. சென்றவாரம் இதேபோல் ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழு வந்திருந்தது. தற்போது அதேபோல் ஆர்யா, இயக்குநர் சந்தோஷ், டி.டி, சதீஷ் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து இயக்குநர் சந்தோஷ், ஆர்யா, சாயீஷா, ராஜேந்திரன், சதீஷ் உள்ளிட்டோர் கலக்கியிருக்கும் படம் ‘கஜினிகாந்த்’.

இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. காமெடி கலந்த குடும்பப்படமாக இது உருவாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]