பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியேறிய டேனி நேற்று தனது காதலியை திருணம் செய்துகொண்டார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே இவரது காதலி வீட்டுக்குள் வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியேறிய தனது திருமணம் விரைவில் நடக்கும் என அறிவித்தார்.

ஆனால், இன்றே பதிவு திருமணம் செய்துகொண்டார். டேனி இன்ஸ்டாகிராம் பதிவில், உங்கள் அனைவரிடமும் இதைப் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி. இதுதான் என் அழகு தேவதை குட்டி. என் மனைவி. நாங்கள் எளிமையான முறையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம்.

குடும்பச் சிக்கலால் இத்தனை நாள் எங்களின் காதல் குறித்து வெளியே சொல்லாமல் இருந்தேன். இன்று முதல் நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக எங்களின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரப் போகிறோம்.

உங்களில் அன்பும் வாழ்த்தும் எங்களுக்கு வேண்டும். இனி, நான் பேச்சிலர் கிடையாது’ என்று பதிவிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]