பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் மருத்துவமுத்தம்- வீடியோ உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரோமோவில் பெண் போட்டியாளர்கள் இருவர் லிப்-டு-லிப் கிஸ் கொடுப்பது போல் காட்டப்பட்டுள்ளது பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கமல் தொகுத்து வழங்கி, மக்கள் மத்தியில் கடந்த ஆண்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதில் மும்தாஜ், தாடி பாலாஜி, ஜனனி ஐயர் உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் இன்றைய புரோமோவில் போட்டியாளர் ஒவ்வொருவரும் பிக்பாஸ் கொடுத்துள்ள டாஸ்க்கை செய்து கொண்டிருக்கின்றனர். இதில், ஜனனி மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் லிப்-டு-லிப் கிஸ் கொடுப்பது போல் காட்டப்பட்டுள்ளது பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறிமருத்துயவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் பார்ப்பதால், இது போன்ற காட்சிகளுக்கு பார்வையாளர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இதேபோல், கடந்த ஆண்டு ஆரவ்-ஓவியா மருத்துவ முத்தம் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]