பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது கடும்கோபத்தில் ராய் லட்சுமி- என்ன காரணம் தெரியுமா??

எதிர்வரும் வாரம் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 17 ஆம் திகதி முதல் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-2 ஆரம்பமாகவுள்ளது .

இந்நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் அவர்கள் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படாமல் இரகசியமாகவே உள்ளது.

இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என தொடர்ந்து பல இடங்களில் செய்திகள் பரவின.

அதனால் கடுப்பான அவர் டுவிட்டரில் கோபத்துடன் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

“நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று எத்தனை முறை தான் மறுப்பு தெரிவிப்பது.

சேனலில் உள்ள யாரோ ரசிகர்களை ஏமாற்ற என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்” என்று அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]