பிக்பாஸில் வளரும் காதல்- யாஷிகாவிடம் முத்தம் கேட்ட மஹத்தை கடுமையாக திட்டும் மும்தாஜ்

நடிகை யாஷிகாவிடம் முத்தம் கேட்ட நடிகர் மஹத்தை, நடிகை மும்தாஜ் கடுமையாக திட்டும் புரமோ வெளியாகிறது..

பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் கலந்து கொண்டவர்களில் நடிகர் மஹத்தும் ஒருவர். இவர் விட்டிற்குள் வந்த நாள் முதலே பெண் போட்டியாளர்களின் பின்னால் சுற்றி சுற்றி வருகிறார். அவர்களிடம் வழிந்து வழிந்து பேசி வருகிறார். இதை பார்க்கும் நெட்டிசன்கள் அவர் மீது ஏற்கெனவே கோபத்தில் இருக்கின்றனர்.

மேலும் அவர் சிம்பு குரலில் பேசி வெறுப்பேற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் யாஷிகாவை வளைத்துப் போட நினைக்கிறார். இதைப் பார்த்த பலருக்கு கடுப்பாக உள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுக்கின்றார்.

இந்த டாஸ்க்கின்படி இரண்டு கேன்களில் உள்ள தண்ணீர் வெளியேறாமல் கைகளை வைத்தே காப்பாற்ற வேண்டும். இந்த டாஸ்க்கில் மகத் தனது கைகளை வைத்து தண்ணீரை காப்பாற்றி வரும் நிலையில் யாஷிகா கையை எடுக்க சொல்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]