பா.ஜ.க-விற்கு எதிராக கோஷமிட்ட இளம் பெண்ணின் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

பா.ஜ.க-விற்கு எதிராக கோஷமிட்ட இளம் பெண்ணின் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..

‘ஜனநாயக விரோத, கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!’ என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண்ணின் தந்தையும், தனது மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

என் மகளை அசிங்கமாக பேசி,உயிர்பயத்தை ஏற்படுத்திய  உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இது குறித்து கைது செய்யப்பட்ட பெண்ணின் தந்தை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க-விற்கு

நெல்லை மாவட்டம் தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றுள்ளார். அதே விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஷோபியா என்ற பெண் பாஜக-விற்கு எதிராக கோஷமிட்டுள்ளார்.

இதனையடுத்து தமிழிசை அளித்த புகாரின் பெயரில் ஷோபியா கைது செய்யப்பட்டமை தற்போது இந்தியாவில் சில அரசியல் கட்சிகள் மத்தில் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க-விற்கு

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]