பாஸ்கர் ஒரு ராஸ்கல் டீசர் வெளியிடும் தேதி அறிவிப்பு

சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலாபால், நிகிஷா படேல் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ பாஸ்கர் ஒரு ராஸ்கல் ’ படத்தின் டீசர் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

அரவிந்த் சாமி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. சித்திக் இயக்கியுள்ள இப்படத்தில், அரவிந்த் சாமியுடன் அமலா பால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் `தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் நிகிஷா பட்டேலும் நடித்திருக்கிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது படத்தின் டீசரை செப்டம்பர் 29ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]