பாவப்பட்ட பணம் பையை எதிர்க்கட்சி தலைவரின் வீட்டு வாசலில் போட்டுச்சென்ற இளைஞர்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய 7 ஆயிரம் ருபா நிதியை மீளத் தருமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கோரியிருந்த நிலையில் கிழக்கு மாகாண இளைஞர்கள் 7 ஆயிரம் பேரிடம் சேகரித்த 7 ஆயிரம் ரூபா பணப் பையினை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவின் வீட்டின் முன்னாள் பொட்டளமாக கட்டிய நிலையில் போட்டுள்ளனர்.

கடந்த மாதம் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்ததுடன் வடமாகாண சபை நினைவேந்தல் நிகழ்வினை ஏற்பாடு செய்யவில்லை எனில் உறுப்பினர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியில் தனது நிதியை மீளத் தருமாறு வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா கோரியிருந்தார்.

இந்த நிலையில் கிழக்கு மாகாண இளைஞர்கள் கடந்த வாரம் வீதி வீதியாக உண்டியல் ஏந்தி நிதியைச் சேகரித்திருந்தனர். அந்த நிதியை இன்று (12) வடமாகாண சபைக்குக் கொண்டு சென்று மீளக்கையளிக்க எத்தணித்தனர்.

பாவப்பட்ட பணம்

அந்தப்பணத்தினை பெற்றுக்கொள்ள வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மறுப்புத்தெரிவித்த போது முதலமைச்சரை சந்தித்து அந்தப் பணத்தினை கையளிக்க முற்பட்டனர். முதலமைச்சரும் பெற்றுக்கொள்ள மறுத்த நிலையில் அந்த பணத்தினை கொக்குவில் பகுதியில் உள்ள வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவரின் வீட்டு வாசலில் கொண்டு சென்று போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கொழும்பில் இருப்பதனால் வடமாகாண சபையின் அமர்வில் கலந்துகொள்ளவில்லை அதனால் பாவப்பட்ட பணம் எனப் பொறிக்கப்பட்டிருந்த அந்த பணப் பையை  அவரது வீட்டு கேற் வாசலில் போட்டுவிட்டு அந்த இளைஞர்கள் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]