பாவனைக்கு உதவாத டின் மீன்கள் கண்டுபிடிப்பு- கொண்டு வரப்பட்ட அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை

171 கொள்கலன்களில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பாவனைக்கு உதவாத டின் மீன்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த டின்களில் காணப்படும் மீன்களில் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த டின் மீன்கள் எந்த நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதோ அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கையெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த டின் மீன்களின் பெறுமதி 378 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]