பாவனைக்கு உதவாத சத்துணவுப் பொருட்களை விநியோகம் செய்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு எதிராக வழக்கு

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியிலுள்ள பல நோக்குக்கூட்டுறவுச் சங்கத்தினால் கற்பிணித் தாய்மாருக்கு விநியோகம் செய்யப்பட்ட சத்துணவுப் பொருட்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்டுள்ளது. இதையடுத்து கிளை முகாமையாளர், பொதி செய்யும் முகாமையாளருக்கு எதிராக ஓமந்தை பொது சுகாதாரப் பரிசோதகரினால் பாவனைக்கு உதவாத சத்துணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக வழங்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருவருக்கும் எதிராக நீதிமன்றத்தினால் தண்டம் அறிவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த செவ்வாய்க்கிழமை ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர் க. சிவரஞ்சன், க. வாகீசன் ஆகியோர் ஈச்சங்குளம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் தமது வழமையான பரிசோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது அப்பகுதியில் 100ற்கும் மேற்பட்ட கற்பிணித் தாய்மாருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் சத்துணவுப் பொருட்கள் பொதி செய்யப்பட்டு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

94 பொதிகளில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது 116கிலோ கிராம் பயறு, 58கிலோ கிராம் கௌப்பி போன்ற பொருட்களில் வண்டு மொய்த்து பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்டுள்ளது. இதையடுத்து பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்ட உணவுப் பொருட்களைக் கைப்பற்றி கிளை முகாமையாளருக்கு எதிராக வழங்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஈச்சங்குளம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிளை முகாமையளருக்கும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதி செய்யும் முகாமையாளருக்கும் தலா 12 ஆயிரம் ரூபா தண்டமாக அறவிடப்பட்டுள்ளது.

பாவனைக்கு உதவாக பொருட்களை அழித்தொழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் ஓமந்தை பொது சுகாதாரப் பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]