பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராக பல ஆதாரங்களை போலீசார் திரட்டி வைத்துள்ளனர். இவை அனைத்தும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பாவனாவை கடத்தியது, மானபங்கம் செய்தது, அதை வீடியோவாகப் பதிவு செய்தது போன்றவற்றின் பின்னணியில் திலீப்பும், அவரது இரண்டாவது மனைவி காவ்யா மாதவனும் இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.
இந்த வழக்கில் கைதான பல்சர் சுனில் கொடுத்த வாக்கு மூலம், சிறையிலிருந்தபடி அவன் திலீப்பின் மேனேஜரிடம் பேசியது, பாவனா பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவை காவ்யா மாதவன் துணிக்கடையில் கைப்பற்றியது என நிறைய ஆதாரங்கள் கைவசம் கிடைத்த பிறகே போலீசார் திலீப்பைக் கைது செய்ய முடிவெடுத்தனர்.
தீலீப்புக்கு எதிராக மொத்தம் 19 ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்தனர். மேலும், கடத்தல் மற்றும் தாக்குதலுக்கு சுமார் ரூ.1.5 கோடி வரை திலீப் தரப்பில் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த ஆதாரங்கள் அனைத்தையும் முதல்வர், டிஜிபியின் பார்வைக்கு முதலில் அனுப்பி வைத்து, ஒப்புதல் பெற்றதும் திலீப்பைக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]