பால்மா, சமையல் எரிவாயு விலைகளில் அதிரடி மாற்றம்??

பால்மா ஒரு கிலோவின் விலை 75 ரூபா­வாலும் சமையல் வாயு சிலிண்­ட­ரொன்றின் விலை 245 ரூபா­வாலும் இன்னும் சில தினங்­களில் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அரச வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது.

தற்­போது லண்­ட­னுக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பி­யதும் பால்மா விலை மற்றும் சமையல் கேஸ் விலை அதி­க­ரிப்பு தொடர்­பாக இறுதி முடி­வெ­டுக்­கப்­ப­டு­மெ­னவும் அவ்­வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

உலக சந்­தையில் பால்மா மற்றும் சமையல் கேஸ் விலைகள் அதி­க­ரித்­துள்ள கார­ணத்தால், இந்­நாட்டு பால்மா மற்றும் கேஸ் நிறு­வ­னங்கள் விலையை அதி­க­ரிக்­கும்­படி வாழ்க்கைச் செலவு தொடர்­பான குழு­வி­டமும் பாவ­னை­யாளர் பாது­காப்பு அதி­கார சபை­யி­டமும் அனு­மதி கோரப்­பட்­டி­ருந்­தது. ஒரு­கிலோ பால்­மாவின் விலை 100 ரூபா­வாலும் கேஸ் விலை சிலிண்­ட­ரொன்­றுக்கு 275 ரூபா­வாலும் அதி­க­ரிக்­கும்­படி இந்­நி­று­வ­னங்கள் பாவ­னை­யாளர் அதி­கார சபை­யிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தன.

தற்­போது 12.5 கிலோ எடை­யுள்ள காஸ் சிலிண்­ட­ரொன்றின் விலை கொழும்பில் 1431 ரூபாவாகவும் பால்மா கிலோவொன்று 810 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்படத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]