பால்மாவிற்கு விலைச்சூத்திரம் அறிமுகம்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு விலைச்சூத்திரம் ஒன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.

பால்மா விலை தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் இறுதி தீர்மானம் எட்டப்பட்டதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் சில அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தன.

இதற்கமைய பால்மா இறக்குமதி நிறுவன பிரதிநிதிகள், நிதியமைச்சின் அதிகாரிகள், வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பிரதிநிதிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது எரிபொருளுக்கு போன்றே பால்மாவிற்கும் விலைச்சூத்திரம் ஒன்றை எதிர்வரும் இரண்டு வாரங்களில் அறிமுகம் செய்வது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]