மறுமலர்ச்சி இளைஞர் கழகத்தால் பாலுமகேந்திரா இயக்கிய வீடு திரைப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது

மறுமலர்ச்சி இளைஞர் கழகத்தால் பாலுமகேந்திரா இயக்கிய வீடு திரைப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது

பாலுமகேந்திரா

மறுமலர்ச்சி இளைஞர் கழகத்தால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் திரைப்படக் காட்சிப்படுத்தலில் எதிர்வரும் 29.09.2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப. 4 மணியளவில் காலையடி, பண்டத்தரிப்பில் அமைந்துள்ள மறுமலர்ச்சி மன்றத்தின் தியாகராஜா மகேந்திரன் குடும்ப உள்ளரங்கில் பாலுமகேந்திர இயக்கிய வீடு திரைப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

நல்ல திரைப்பட ரசனையை இளைஞர்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கத்துடன் மறுமலர்ச்சி இளைஞர் கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் இச் செயற்பாட்டில் கடந்த மாதம் ஈரானிய இயக்குனர் மஜீதி மஜித் அவர்களின் Children of Heaven (சொர்க்கத்தின் குழந்தைகள்) திரைப்படம் தமிழ் உபதலைப்புகளுடன் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]