பாலிவுட் நடிகைக்கு நடு ரோட்டில் இளைஞர்களால் ஏற்பட்ட விபரீதம்!!

பாலிவுட் நடிகையும் மாடலுமான ஆகார்ஷி சர்மாவிற்கு நடு ரோட்டில் இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.

ஆகார்ஷி சர்மா பைக்கில் சென்று கொண்டிருந்த போது இரு இளைஞர்கள் பின்னாடியே துரத்தி வந்திருக்கிறார்கள். திடீரென ஆகார்ஷி சர்மாவின் பாவாடையை பிடித்து இழுத்து ஆபாசமாகப் பேசியுள்ளனர்.

இதனால் பைக் ஓட்டிக்கொண்டிருந்த ஆகார்ஷி கீழே விழுந்து காயமடைந்தார். “நடுரோட்டில் நடந்த இந்த அவலத்தை யாரும் தட்டி கேட்க முன்வரவில்லை. யாரும் உதவிக்கு வரவில்லை. இதுதான் எனக்கு மன வருத்தத்தை தருகிறது.” என்று ஆகார்ஷி கூறியுள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது புகார் அளிக்கப்போவதாகவும் ஆனால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]