பாலியல் விடுதி ஒன்றில் அடிமையாக வைத்திருந்த உராங்குட்டான்- குரங்கின் தற்போதைய பரிதாப நிலை

உராங்குட்டான் வகை குரங்கொன்றை இந்தோனேஷிய பாலியல் விடுதி ஒன்றில் அடிமையாக வைத்திருந்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளதுபாலியல் .

அந்த விடுதியிலிருந்து மீட்கப்பட்ட Pony என்று பெயரிடப்பட்ட அந்த குரங்கினால் காட்டுக்குள் சென்று வாழமுடியாத அளவிற்கு அது பாதிக்கப்பட்டுள்ளதாக அதை கவனித்து வருவோர் கூறியுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

ஒரு குட்டியாக இருக்கும்போது அதை அதன் தாயிடமிருந்து பறித்துக் கொண்ட சிலர், அதை ஒரு பாலியல் விடுதியில் பாலியல் அடிமையாக வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த குரங்கின் உடலில் உள்ள உரோமம் முழுவதும் இரண்டு நாளுக்கொருமுறை ஷேவ் செய்யப்பட்டு, அதற்கு ஒரு பெண் போல மேக் அப்பும் வாசனை திரவியங்களும் பூசப்பட்டு அது பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

வித்தியாசமான பாலியல் விருப்பங்கள் கொண்ட மனித மிருகங்கள், அந்த குரங்குடன் உறவு கொள்ள 2 பவுண்டுகள் கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அதற்கு ஆறு வயதாகும்போது மத்திய Kalimantan இலுள்ள Kareng Pangi என்னும் பாலியல் பாலியல் கிராமத்திலிருந்து அது மீட்கப்பட்டது.

Ponyயை மீட்ட குழுவினரில் ஒருவரான Lone Droscher-Nielson கூறும்போது, Pony ஒரு செல்லப்பிராணியாக இல்லாமல் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை அறிந்தபோது தான் அதிர்ந்து போனதாக தெரிவிக்கிறார்.

Ponyயை மீட்கப்போகும்போது அந்த பாலியல் விடுதியின் உரிமையாளர்கள் அதை விட மறுத்ததாகவும், தங்களை தடியால் தாக்கப்போவதாக மிரட்டியதாகவும் தெரிவிக்கிறார்கள் மீட்புக்குழுவினர்.

பின்னர் AK-47 மற்றும் பல ஆயுதங்களுடனும், 35 பொலிசாருடன் சென்ற பின்னரே Ponyயை மீட்க முடிந்திருக்கிறது.

தற்போது வன விலங்குகள் காப்பகம் ஒன்றில் வாழும் Ponyயின் நிலைமையில் முன்னேற்றம் காணப்பட்டாலும் அவளால் மீண்டும் காட்டில் சென்று வாழ முடியாது என்கின்றனர் Ponyயை கவனித்துக் கொள்பவர்கள்.

இதில் இன்னும் மோசமான செய்தி என்னவென்றால், இந்தோனேஷிய கிராமங்களின் மோசமாக சட்டதிட்டங்களால், Ponyயை பிடித்து துன்புறுத்தியவர்கள் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவேயில்லை என்பதுதான்.

பாலியல் விடுதி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]