பாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்

பாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார்.

உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஆசி பெற்று செல்கின்றனர்.

குறித்த சாமியார் அந்த ஏரியாவில் மிகவும் பிரபல்யமானவர். இவர் மீது பொறாமை கொண்ட சிலர், மாதானி பாபா மீது பாலியல் புகாரை சுமத்திவிட்டனர்.

தன் மீதான பாலியல் புகார் ஒரு கட்டுக்கதை என்றும் தன் வளர்ச்சி பிடிக்காமல் இவ்வாறு யாரோ செய்துவிட்டனர் என சாமியார் கூறியுள்ளார்.

இருப்பினும் சாமியார் கூறியதை யாரும் நம்பவில்லை எனத் தெரிகிறது.

இதனால் மன வேதனையடைந்த மாதானி பாபா, தன் மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். தற்பொழுது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]