முகப்பு News India பாலியல் பலாத்கார வழக்கில் நித்தியானந்தாவிற்கு வெளிவரமுடியாத பிடியாணை

பாலியல் பலாத்கார வழக்கில் நித்தியானந்தாவிற்கு வெளிவரமுடியாத பிடியாணை

பாலியல் பலாத்கார வழக்கில் ஆஜராகாத நித்தியானந்தாவிற்கு, பிணையில் வெளிவரமுடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நித்தியானந்தா விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும், அதனால் அவரை பிணையற்ற பிடியாணையில் கைது செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் குறித்த வழக்கு விசாரணை, எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் உள்ள ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில், நித்தியானந்த மீதான பாலியல் குற்ற வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த வழக்கு நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றவாளியாக கருதப்படும் நித்தியானந்த நீதிமன்றில் ஆஜராகாவில்லை. எனினும் அவரது சட்டத்தரணி சார்பில், நித்தியானந்தா நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன் நித்தியானந்த வடமாநிலத்தில் ஆன்மீக சுற்றுபயணத்தில் இருப்பதால், அவரால் ஆஜராக முடியவில்லை என்றும், குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com