பாலியல் நடிகையொருவர், புத்தர் சிலையின் மேல் போஸ் கொடுத்துள்ளார்

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பாலியல் நடிகையொருவர், புத்தர் சிலையின் மேல் ஏறி, ஆபாசமான முறையில், புகைப்படத்துக்கு போஸ் குடுத்த நிலையில், கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகி வருகிறார்.

றாஷெல் ஸ்டார் என்ற குறித்த நடிகை, ஐக்கிய அமெரிக்காவின் லாஸ் வெகாஸுக்குச் சென்ற போது, அங்கு அமர்ந்த வடிவில் காணப்படும் புத்தர் சிலைக்கு மேல், அரைகுறை ஆடைகளுடன் ஏறி நின்று, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அத்தோடு, “புத்தாவுடன் இருக்கிறேன்” என்றும் அவர் அப்புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.