பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு பஸ்சில் வைத்தே தர்ம அடி கொடுக்கும் பெண்- வைரல் வீடியோ உள்ளே

டேய்.. என் கால்ல விழுடா.. மரியாதையா விழுடா” என்று அந்த நபரை போட்டு வெளுக்கிறார் ஒரு இளம்பெண்- ஓடும் பஸ்சில் கையை, காலை வச்சுக்கிட்டு சும்மா போகாமல், உடன் பயணித்த இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

அந்த பெண்ணோ கோவை சரளா போல வெகுண்டெழுந்துவிட்டார். இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. இது எந்த ஊர் என தெரியவில்லை. அந்த பஸ் சென்று கொண்டிருக்கிறது. உள்ளே பயணிகள் நிறைய பேர் உட்கார்ந்திருக்கிறார்கள்.

அந்த ஆளுக்கு எப்படியும் 50 வயசுக்கு மேலதான் இருக்கும். அவரை இளம்பெண் சரமாரியாக வெளுக்கிறார். “டேய்.. என் கால்ல விழுடா.. மரியாதையா விழு.. இந்த வயசுல கால்ல விழ உனக்கு வெட்கமாக இருக்கா? எனக்கு இப்போ என் கால்ல நீ விழுந்தாகணும். விழுடா.. விழுடா..” என்று கையால் அந்த நபரின் சொட்டை தலை, தோள்பட்டை என மாறி மாறி அடிக்கிறார்.

அதே பஸ்ஸில் பெண்கள் இருந்தாலும் இளம்பெண்ணுக்கு யாரும் துணையாக பேசவில்லை. துணிச்சலாக தனி ஒரு பெண்ணாவே காரியத்தில் இறங்கிவிட்டார். அந்த நபரோ பெண் அடிக்க அடிக்க, விழி பிதுங்கி பம்முகிறார். பஸ்சில் இருந்த மற்ற பயணிகளோ, அந்த நபரை இறக்கி விட்டுடலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த இளம்பெண்ணோ விடவே இல்லை. என் கால்ல விழற வைக்கும் இவனை விட மாட்டேன் என்கிறார் ஆவேசமாக.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]