பாலியல் தொல்லை குறித்து கஜோல் கருத்து..

பாலியல் தொல்லை குறித்து கஜோல் கருத்து..

சினிமா துறையில் பாலியல் தொல்லை இருந்து வருவதாக பல நடிகைகள் கூறிவரும் நிலையில், தற்போது பாலிவுட் நடிகை கஜோலும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பாலிவுட் துறையில் முன்னணி நடிகையான கஜோல் இது குறித்த பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

‘ஹாலிவுட்டை போன்று பாலியல் தொல்லை குறித்து பேசும் #Metoo இயக்கம் பாலிவுட் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் வர வேண்டும்.

இது ஒரு துறையின் பிரச்சனை அல்ல இருப்பினும் பாலிவுட் மட்டும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று கூறிய பிறகு அந்த நபருக்கு என்ன நடக்கும்? எனவே பாலியல் தொல்லை குறித்து பேசுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து வெட்கப்படத் தேவையில்லை.

பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து வெளிப்படையாக பேசிவிட்டால் தங்களின் கெரியர் நாசமாகிவிடுமோ? என்ற பயத்தில் தான் பலரும் வாய் திறப்பது இல்லை என்று சில நடிகைகளே தெரிவித்துள்ளனர்.’ என்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]