பாலியல் உணர்வை தூண்டும் ஹோர்மோன் ஊசியினை ஏற்றி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் கைது

பாலியல் உணர்வை தூண்டும்

பாலியல் உணர்வை தூண்டும் ஹோர்மோன் ஊசியினை ஏற்றி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் கைது

இந்தியாவிலுள்ள தெலுங்கானா மாநிலத்தில், 11 சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 8 பேரை அம்மாநில கைது செய்துள்ளனர். சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவ் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பொலிஸாரினால் மீட்கப்பட்ட 11 சிறுமிகளில் 4 சிறுமிகள் 7வயதிற்கும் கீழ்பட்டவர்களாகும். அதில் ஒரு 3 1/2 வயதான சிறுமியும் உள்ளடங்குகிறார்.

இச்சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கு விலையுயர்ந்த பாலியல் உணர்வை தூண்டும் ஹோர்மோன் ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிறமிகளை பரிசாதனைக்கு ஏற்படுத்திய போதே இவ்விபரம் தெரிய வந்துள்ளது.

பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]