பாலஸ்தீனத்திற்கான நிதியுதவி நிறுத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு

பாலஸ்தீனத்திற்கான நிதியுதவி நிறுத்தப்பட்டதாக அமெரிக்கா இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.

இதன்படி அறிவிக்கப்பட்ட 200 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்கா அங்கீகரித்ததை தொடர்ந்து வெள்ளை மாளிகையுடனான உறவை பாலஸ்தீனம் முறித்துக்கொண்ட நிலையில், இருநாடுகளுக்கும் இடையே மோதல் வந்த நிலையில் இந்த நிதியுதவி நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவை ‘அரசியல் ரீதியிலான மலிவான அச்சுருத்தல்’ என குறிப்பிட்டுள்ள பாலஸ்தீனம், இது போன்ற நடவடிக்கைகளால் பாலஸ்தீன மக்களையும், அரசையும் மிரட்டமுடியாது. பாலஸ்தீன மக்களின் உரிமை விற்பனைக்கானது அல்ல என அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் நிகழாண்டு பட்ஜெட்டில், பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங் மற்றும் காசா நகரங்களின் நிர்வாகம், சுகாதாரம், கல்வி போன்றவற்றை மேம்படுத்த 251 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து.

ஆனால், அப்பகுதிகளில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 200 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகை நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஏற்கனவே மனித உரிமைகள் மற்றும் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில், பொதுமக்களின் உயிர்களுக்கும் பயங்கரவாதிகள் ஆபத்தை விளைவித்து வருவதால் அங்கு மிகவும் மோசமான சூழல் நிலவிவருகிறது.

இதனால், இப்பகுதியில் தேவையான உதவிகளை செய்வதில் சர்வதேச நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது என அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பாலத்தீனத்திற்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிதி வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]