பார்ட்டி திரைப்பட மோஷன் போஸ்ட்டர் வெளியீடு…

தமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்தவர்  இயக்குனர் வெங்கட் பிரபு. இவரது ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை உண்டாக்கும் .

அவ்வாறான இவர் தனது அடுத்த படத்தின் விவரங்களையும் மோஷன் போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளார் .

வு.சிவா’ வின் ‘அம்மா கிரேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகவிருக்கும்  இந்த படத்திற்கு ‘பார்ட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலன் ‘அம்மா கிரேஷன்ஸ் ‘ தனது 25 ஆம் ஆண்டில் அடிவைக்க உள்ளது.

இளசுகளின் நாடியை என்றுமே நன்கு அறிந்து வைத்திருக்கும் வெங்கட் பிரபு ‘பார்ட்டி ‘ என படத்திற்கு பெயரிட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர். இதில் பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபுவின் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்க உள்ளார். முடு பிரவீன் எடிட்டிங் செய்யவுள்ளார்.

இப்படத்திற்க்காக பெரும் நட்சத்திர பட்டாளத்தை வெங்கட் பிரபு ஒன்று சேர்த்துள்ளார். சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஜெய், ஷிவா, சம்பத், ‘கயல் ‘ சந்திரன், ரெஜினா கசன்டரா இசஞ்சிதா ஷெட்டி மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ‘பார்ட்டி’ யில் கலக்க உள்ளனர்.

‘பார்ட்டி ‘ யின் படப்பிடிப்பு பிஜி தீவில் நடக்கவுள்ளது .’சரோஜா ‘ மூலம் எனக்கு இரண்டாவது தாய்வீடான அம்மா உசநயவழைளெ  நிறுவனத்துக்காக  இப்படத்தை இயக்குவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

‘பார்ட்டி’ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை ” என கூறினார் இயக்குனர் வெங்கட் பிரபு.

பார்ட்டி திரைப்பட

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]