பாரீஸில் தமிழில் பேசி கலக்கிய தனுஷ்- அசந்து போன ஹாலிவுட் நடிகர்கள்

பாரீஸில் தமிழில் பேசி கலக்கிய தனுஷ்- அசந்து போன ஹாலிவுட் நடிகர்கள்

தனுஷ் கோலிவுட், பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துவிட்டார். இவர் நடிப்பில் ஹாலிவுட் படமான The Extraordinary Journeyof The Fakir படம் ரிலிஸாகியுள்ளது.

இப்படத்தின் ப்ரீமியர் காட்சி நேற்று பாரீஸில் கிராண்ட் ரெக்ஸ் சினிமாவில் நடந்தது, தனுஷை பார்க்க பல தமிழ் மக்கள் வந்தனர்.

அப்போது தனுஷ் மேடைக்கு வர இப்படத்தில் பணியாற்றிய ஹாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் என அனைவருமே அசந்துபோய் விட்டனர். ஏனெனில் தனுஷ் மேடைக்கு வர, ரசிகர்கள் ஆரவாரம் அடங்கவே 1 நிமிடம் ஆனது.

அதை தொடர்ந்து ‘தனுஷ் தமிழில் தான் பேசவேண்டும்’ என அன்பு கட்டளை வைக்க, தனுஷ் கையை உயர்த்தி சரி என்றார்.பிறகு ரசிகர்களுடன் கலந்துரையாடிவிட்டு ‘ஊதுங்கடா சங்கு’ பாடலை பாடி அதிர வைத்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]