பாராளுமன்ற கலைப்பு விசாரணை தொடர்பான இறுதி தீர்ப்பு நாளை??

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை இன்று (07) நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

நேற்று இந்த வழக்கு விசாரணை முடிவில் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு நாளை (08) வரை தடை உத்தரவை நீடித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் இன்றைய நாள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உட்பட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு வருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

நாளை (8) அல்லது இன்று மாலைக்குள் இறுதித் தீர்ப்பு வெளியாகலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]