பாராளுமன்றில் மஹிந்த தரப்பு மங்களசமரவீர மீது வீசி எறிந்த நூல் எது தெரியுமா?

நேற்று மஹிந்த தரப்பு பாராளுமன்றத்தில் நடத்திய கொடூரமான தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்தனர்.

நேற்று சபை அமர்வுகள் மதியம் 1 .30 மணிக்கு ஆரமபமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் , அதற்கு முன்னரே சபாநாயகர் ஆசனத்தை ஆக்கிரமித்து கொண்ட மஹிந்த தரப்பினர் அங்கிருந்தபடி கோஷம் இட்டு குழப்பம் ஏற்படுத்தினர்.

பின்னர் நீண்ட நேரத்தின் பின்னர் , சிறப்பு பொலிஸ் பிரிவின் பாதுகாப்புடன் சபைக்குள் நுழைந்த சபாநாயகர் , இருக்க ஆசனம் இன்றி நின்று கொண்டே சபையை கூட்டினார்.

புதிய பிரதமர் மஹிந்த மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு கொண்டு வர முயன்ற போது மஹிந்த தரப்பினர் சபாநாயகர் மீது கையில் கிடைத்த பொருட்களை வீசி தாக்கினர்.

இந்த தாக்குதலை எதிர்கொண்ட பொலிஸ் வீரர்கள் சபாநாயகரை காப்பாற்றி கொண்டனர்.

அது மட்டுமன்றி மிளகாய் தூள் கரைசலை பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொலிசாரை நோக்கி ஊற்றினர்.

இந்நிலையில் அங்கிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் மங்கள சமரவீரவின் தலையில் பெரிய புத்தகம் ஒன்று வந்து விழுந்தது.

உடனே சுதாகரித்து கொண்ட மங்கள சமரவீர , அந்த புத்தகத்தை கையில் எடுத்து கொண்டு , “என்னாளும் திருப்பி தாக்க முடியும் , எனினும் இந்த புத்தகத்தால் தாக்கும் அளவுக்கு உங்கள் வன்முறை அதிகரித்து விட்டது” என கூறி அந்த புத்தகத்தை பத்திரமாக ஓரிடத்தில் வைத்தார்.

அதன் பின்னரே அது பைபிள் புனித நூல் என்பது தெரிய வந்தது.

ஒரு மதத்தினரின் நம்பிக்கையான புனித நூலான பைபிள் மஹிந்த தரப்பினரின் தூக்கி எறியும் பொருளாக மாறியமை அங்கிருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி தருவதாக இருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]