பாராளுமன்றத்தை ஜனாதிபதி உடனடியாக கூட்டவேண்டும் – எல்டர்ஸ் அமைப்பு

பாராளுமன்றத்தை ஜனாதிபதி உடனடியாக கூட்டவேண்டும் – எல்டர்ஸ் அமைப்பு

உலகின் மூத்த அரசியல் தலைவர்களின் எல்டெர்ஸ் அமைப்பானது இலங்கை ஜனாதிபதிக்கு, இலங்கையில் ஒருபோதும் இல்லாத அளவு அரசியல் சூழ்நிலை காணப்படுவதாகவும், அது குறித்து எம் அமைப்பு கவலைகொள்வதாகவும் மற்றும் இந்த சூழ்நிலையை போக்குவதற்கு மக்களின் சக்தியாக திகழும் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ் எல்டர்ஸ் அமைப்பானது உலகில் பிரசித்திபெற்ற, மதிக்கப்படும் அரசியல்வாதிகள், மூத்த அரசியல் வாதிகள், அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோரால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பினை உருவாக்கியவர் உலகப் புகழ்பெற்ற தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலாவாகும்.

இலங்கையிலுள்ள அரசியல் தலைவர்களை சட்டத்தினை பின்பற்றுமாறும், மனித உரிமைகள் ஜனநாயக கொள்கைகளிற்கு முன்னுரிமை அளிக்குமாறும் எல்டெர்ஸ் அமைப்பானது கேட்டுக்கொண்டுள்ளது.

அரசியல் பதட்டநிலையை அதிகரிக்கும் வேளைகளில் ஒருபோதும் வன்முறைகள் வராதவண்ணம், சட்டத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் எல்டர்ஸ் அமைப்பானது கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நெருக்கடியான அரசியல் சூழலை அமைதியான வழிமுறைகள் மற்றும் சட்டரீதியில் தீர்வை காணவேண்டும் என நோர்வேயின் முன்னாள் பிரதமரும் எல்டெர்ஸ் அமைப்பின் பதில் தலைவருமான குரொ ஹர்லெம் பிரென்ட்லான்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரச தலைவரே அரசமைப்பை மீறினால் மக்களுக்கு அரச ஸ்தாபனங்கள் மீதான நம்பிக்கை இழந்துபோகலாம் எனவும் எல்டர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]