பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு (10) ஆம் திகதிவரை தடை உத்தரவு நீடிப்பு

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கான தடை உத்தரவு (10) ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. Parliament Dissolve Supreme Court

நேற்று இந்த வழக்கு விசாரணை முடிவில் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு நாளை (08) வரை தடை உத்தரவை நீடித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று விசாரணை இடம்பெற்ற போது மீண்டும் தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உட்பட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு வருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

நாளை (8) இறுதித் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]