பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கவே பிரதமர்- சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

சபாநாயகர் கருஜயசூரிய இன்று திங்கட்கிழமைவெளியிட்டுள்ள அறிவிக்கையிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கிய வாக்குறுதிக்கு விரோதமாக செயற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.கடுந்தொனியுடனான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்றத்தில் மஹிந்த தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை அங்கீகரிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

ஒக்டோபர் -26ல் பாராளுமன்றத்தில் கட்சிகள் இருந்த நிலையையே ஏற்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியிருப்பதானது ரணில் விக்கிரமசிங்கவையே இன்னமும் நாட்டின் சட்டபூர்வ பிரதமராகவும் அவரது அமைச்சரவையையே சட்டபூர்வமானதெனதும் ஏற்றுக்கொண்டுள்ளதை உறுதிசெய்கின்றது.மேலும் ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை உட்பட முஸ்லீம் கட்சி உறுப்பினர்கள் 116 பேர் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கையொப்பமிட்டு தன்னிடம் வழங்கியுள்ளனர்.

ஜனாதிபதியின் இவ்வாறான செயற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானதும், ஜனநாயகத்திற்கு எதிரானதும் என அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரிய இன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image may contain: text

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]