பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய ஜே.வி.பி தீர்மானம்

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் நிலைமை தொடர்பாக பாராளுமன்ற பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது
நேற்றைய தினம் ஏற்பட்ட சம்பவத்தின் போது விஜித ஹேரத் எம்.பி உள்ளிட்ட சிலர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக திங்கட்கிழமை பாராளுமன்ற பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை பாராளுமன்ற பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அவர்கள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]