பாராளுமன்றத்தில் இடையூறு ஈடுபட்டவர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை

கடந்த நவம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குழப்பத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த குழு அது தொடர்பான அறிக்கையை தயாரித்துள்ள நிலையில் சபாநாயகர் கருஜயசூரியவிடம் அது கையளிக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து அந்த அறிக்கையை சபாநாயகர் சட்டமா அதிபருக்கு அனுப்பி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]