பாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு

அரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின்
ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன.
சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது.

இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும்
அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியவர்களாக
இருக்கின்றனர்.  இவ்வாறு தெரிவிக்கின்றார். ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருமான நஸிர் அஹமட்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய
நகர்வுக்கள் குறித்து அவரது ஆதரவாளர்களுடன் நடத்திய சந்திப்பின்போதே அவர்
இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஜனநாயகத்தைப் பாதுகாக்க முஸ்லிம்காங்கிரஸ் ஒருபோதும் தயங்காது. அதற்கான அடிபாதைகளில் நாம் சட்டரீதியாகத் தொடர்ந்து முன்னெடுப்போம். தற்போதையடி நிலையில் இதற்கான சகல நடவடிக்கைகளையும் எமது தலைவர் ரவூப்ஹக்கீம் மிகவும் சிறப்பாக மேற் கொண்டு வருகின்றார். எத்தகைய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதனைச் சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோம்.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் முரண்பாட்டு நிலைமைகளைப்
பொறுத்தவரையில் நாம் எடுப்பார் கைபிள்ளை போன்று செயற் படமுடியாது. எமது
சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் நிலை நாட்டுவதிலும் நாம் கருசனை கொண்டு செயற்பட வேண்டும். தற்போதைய அரசியல் நிலைகளை நாம் அழமாக – நன்கு அலசி ஆராய்ந்து இதற்கான முடிவுகளை எடுத்துச் செயற்பட வேண்டும். எங்கேனும் ஒரு இடத்தில் தவறுநிகழ்ந்து விட்டால் அது எனக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

எனவே இது அரசியல்சம்பந்தப்பட்ட விடயம் என மக்கள் ஒதுங்கிவிடாது அவர் தமது
கடமைகளைச் நன்கு அறிந்து செயற்பட முன்வரவேண்டும். அதேவேளை மதத்தலைவர்கள் சிவில் சமூகத்தலைவர்கள் கல்விமான்கள் உட்பட சகல தரப்பினரும் நீதி நியாயம் அரசியல்கலாசாரம் குறித்து நமது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கட்டுக்கோப்பான எமது செயற்பாடுகளே நமது சமூகத்தின் மேன்மைக்கு முக்கியமானது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காது. சமூகத்தின் மேன்மைக்கு உழைக்க நாம் தயாராக வேண்டும் – என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]