பாராட்டு பத்திரம் வாசிக்கும் டிரம்ப் – புலனாய்வுத் துறையினர் விசாரணை

அதிபர் தேர்தல் சமயத்தில் ரஷ்ய வழக்கறிஞரை தனது மகன் சந்தித்து தொடர்பான விளக்கங்களை அவர் அளித்ததை தொடர்ந்து ஜான் டிரம்ப் அருமையான குணம் கொண்டவர் என அதிபர் டிரம்ப் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷியாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி அமெரிக்க புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயத்தில், டிரம்பின் மகன் ஜான் டிரம்ப், ரஷிய அதிபர் கிரம்ளின் மாளிகையுடன் தொடர்புடைய ஒரு வக்கீலை சந்தித்து பேசியதை ஒப்புக் கொண்டதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனின் செல்வாக்கை சேதப்படுத்தும் விதமாக தகவல்களை வெளியிடுவதாக ரஷிய வக்கீல் நடாலியா என்பவர் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து அவரை ஜான் டிரம்ப் சந்தித்துள்ளார் என்றும் பரபரப்பு தகவல்கள் கிளம்பியது.

இதனையடுத்து, அந்த சந்திப்பு தொடர்பான இ-மெயில் தகவல்களை ஜான் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், அதிபர் தேர்தல் தொடர்பாக சந்திப்பின் போது எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜான் டிரப்பின் செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், “ எனது மகன் அருமையானவர். அவர் ரஷ்யாவைச் சேர்ந்த வழக்கறிஞரைதான் சந்தித்தார், ரஷ்ய அரசு வழக்கறிஞரை அல்ல. அவர் தவறாக எதுவும் செய்யவில்லை. அது ஒரு சிறிய சந்திப்புதான்” என தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]