பாரதி கவிதைகளில்
பாரதி கவிதைகளில்

காலந்தோரும் பல இலக்கியங்கள் இயற்கையைப் பற்றிக் கூறிவருகின்றன. அதன் வகையில்காணும்பொழுது தற்கால கவிஞர்கள் பலரும் இயற்கையை தனது கவிதைகளில் பதித்துள்ளனர். அவ்வாறு இயற்கையைப் பதித்தவர்களில் பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் போன்றோரும்.

மற்றும் பலரும் இருந்துவருகின்றனர். இக்கவிஞர்களுக்கெல்லாம் மூத்தவர் இயற்கையை நேசித்துப் பாடியவர் கபிலர். கபிலரை இயற்கைப் புலவன் என்றுக் கூட அழைப்போம். அவரின் வரிசையில் வந்தவர் பாரதியார்.

பிறப்பு: டிசம்பர் 11, 1882

பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)

பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்

இறப்பு: செப்டம்பர் 11, 1921

நாட்டுரிமை: இந்தியா

இயற்கையை நேசிப்பதில் இவர் தனித்தன்மைக் கொண்டவர். பாரதி தனது இயற்கை கலந்து பாடுவதில் திறம் கொண்டவர். பாரதி காட்டும் இயற்கையை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ப. மணிகண்டன், முனைவர் பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி – 24.

இயற்கையின் தாக்கம்

இயற்கையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொணண்டே இருக்கிறது. இயற்கை அழிந்து வரும் சூழலில் இயற்கையானது நம்மையேத் தாக்கும் நிலைமைக்கு உட்பட்டிருக்கிறோம். ஆகையால் இயற்கையின் பிடியிலிருந்து நாம் தற்காத்துக் கொள்ளவேண்டும்.

மழை காற்று புயல் போன்றவற்றைப் பற்றி மிக எளிமையாகவும் சுருக்கமாகவும் பாரதியார் கூறியிருக்கிறார்.

மழை

மனிதனின் இன்றியமையாத வாழ்க்கைச் சூழலில் அவனுக்கு மிகவும் சவால் நிறைந்த ஒன்றாக இருப்பது மழையும் ஒன்றாகும். மழைப் பொழியவில்லை என்றால் அவனின் வாழ்வு முற்றிலும் பாதிக்கப்படும். மழை அதிகமாகப் பெய்வதால் அவன் பயிரிட்ட தானிய வகைகள் சேதம் அடைகின்றன. மழை ஒரு வகையில் நன்மையானதே ஆகும்.

மின்னல் இடி இவை இரண்டும் இணைந்து மேகத்தைப் புரட்டிப்போடும் அளவிற்கு இடித்தது. காற்று பலவித ஓசையை எழுப்பி விண்ணை முட்டுமளவிற்கு வீசுகிறது. வானம் அதன் நிலையிலிருந்து சற்றுவிலகி பல விதமான தாள இசையைக் கொட்டுகிறது. எட்டுத்திசைகளிலுமே மழைக் கொட்டித் தீர்த்தது. இதனை ‘வெட்டி யடிக்குது மின்னல் – கடல் வீரத் திரைக்கொண்டு விண்ணையிடுக்குது கொட்டி யிடுக்குது மேகம்.

– கூகூவென்று விண்ணைக் குடையுது காற்று

சட்டச்சட சட்டச்சட ட்டா – என்று

தாளங் கொட்டிக் கனைக்குது வானம்É

எட்டுத் திசையு மிடிய – மழை

எங்ஙனம் வந்ததடா…………..’ (பா.க.கா.பா.மழை – 9-16)

என்று பாரதியார் கூறுகின்றார்.

காற்று

காற்று இல்லையெனில் இந்த பூமிதனில் வாழ முடியாது. காற்றுக்குக் கூட நாம் காசு கொடுக்கும் காலம் வந்தாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆகையால் மரம் வளர்த்து நல்லத் தூய்மையானக் காற்றினை சுவாசிப்போம்.

பூமியில் காற்றானது அதிக சப்தத்தோடு அடித்தது. அதனால் பல இசைகளும் பலவாறு இசைத்தது. இதனை பாரதி

‘மண்ணுல கத்துநல் லோசைகள் காற்றெனும்

வானவன் கொண்டுவந்தான்É

பண்ணி லிசைத்தவ வொலிக ளனைத்துயும்

பாடி மகிழ்ந்திடுவோம்.’ (பா.க.கா.பா.காற்று-33- 36)

என்ற கவிதை வரிகளில் உரைக்கின்றார்.

புயல் காற்று

பருவ காலங்ளில் ஏதேனும் வளிமண்டல அடுக்கு சுழற்சி ஏற்பட்டு அதன் காரணமாக காற்றழுத்தத தாழ்வுமண்டலம் உருவாகி அது வலுவடைந்து புயலாக உருமாகிறது. அந்தப் புயலுக்கெல்லாம் தற்போது பெயர் வைக்கும் வியக்க வைக்கிறது. எனவே புயலின் தாக்கம் மிக கடுமையானதாகவும் இருக்கும் சற்று வலுமையிழந்தும் வரும். பொதுமக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்.

காற்று மிக அதிவேகமாக வீசுகிறது. கடல் தனது வேகத்தைத் தீவிரப் படுத்தியது. கதவு எல்லாம் தொளைக்குமளவிற்கு காற்று அடிப்பதை

‘காற்ற டிக்குது கடல் குமுறுது

தூற்றல் கதவு சாளர மெல்லாந்

தொளைத் தடிக்குது……………….’ (பா.க.கா.பா.புயல்காற்று-1- 4)

பாரதியார் தனது கவிதை வரிகளில் கூறுவதை காணமுடிகின்றன.

வானத்தில் நிகழும் காட்சி

 

சுப்ரமணிய பாரதியார், செல்லம்மா
சுப்ரமணிய பாரதியார், செல்லம்மா

வானில் பல அதிசங்கள் தினந்தோரும் நிகழ்கின்றன. அந்த அதிசயங்களில் ஒன்று தான் நட்சத்திங்கள் நிலவு சூரியன் இடைவிடாது ஒளியை உமிழ்கின்றன. மேகங்கள் ஒன்றிணைந்து மழைப் பொழிவைத் தருகின்றன. மேகங்கள் அசைந்து செல்வது. இப்படி எண்ணற்ற நிகழ்வுகளை நாம் கண்முன்னேக் காண்கின்றோம்.நிலவு நட்சத்திரத்தோடு இணைந்து வானில் ஒளியைக் கொடுக்கின்றது. இந்தக் காட்சியை

‘சீர விருஞ்சுடர் மீனொடு வானத்துத்

திங்களையும் சமைத்தே’ (பா.க.கா.பா.நி.வா.காற்று-13- 14)

என்று பாரதியார் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

காட்டில் நிகழும் காட்சி இயற்கை எழில் கொஞ்சும் காட்டில் பல விலங்குகள் பல பறவைகள் பல மரங்கள் பல பூக்கள் இன்னும்

எத்தனையோ காட்சிகள் அழகு சேர்க்கின்றன. பசுமை நிறைந்த உலகினைக் காணவேண்டும் எனில் நாம் காட்டிற்கு சென்றால் காணமுடியும்.

காட்டு வழியில் சென்றால் இயற்கை அழகைக் கொள்ளைக் கொள்ளும் மலைக் காட்சி காணப்படும். அதனருகே நீர்வீழ்ச்சி (அருவி) ஒன்றுள்ளதை

‘காட்டு வழிகளிலே – மலைக்

காட்சியி லே புனல் வீழ்ச்சியி லே….’ (பா.க.தோ.பா.மூ.காதல்-49- 50)

பாரதி காட்டுகின்றார்.

இயற்கையான உலகில் வாழ வேண்டும். பாரதியார் தனது கவிதைகளில் பல இயற்கைக் காட்சிகளை பலவாறு

எடுத்துக் கூறியிருப்பதையும் அழகாக் கவிதை மூலம் காட்சிப் படுத்தியதையும் இக்கட்டுரையின் மூலம் காணமுடிந்தன.

பார்வை நூல்

பாரதியர் கவிதைகள் தொகுப்பு – அருணா பப்ளிகேஷன்ஸ் சென்னை.

சுருக்கக் குறியீடு

பா – பாரதியார்

க – கவிதைகள்

கா – காதல்

பா – பாடல்

ம – மழை

கா – காற்று

பு – புயல்

நி – நிலா

வா – வானம்

தோ – தோத்திரம்

மூ – மூன்று

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]