முகப்பு Cinema பாரதிராஜாவால் கமல்ஹாசனுக்கு கிடைத்த அதிஷ்டம்

பாரதிராஜாவால் கமல்ஹாசனுக்கு கிடைத்த அதிஷ்டம்

பாரதிராஜாவால் கமல்ஹாசனுக்கு கிடைத்த அதிஷ்டம்

மண்வாசனை படங்களை இயக்குவதில் பெயர் போனவர் என்றால் அது பாரதிராஜா தான்.

இந்நிலையில், மரகதக்காடு என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ள நிலையில், இதில் கலந்து கொண்ட பேசிய பாரதிராஜா ஒரு சுவாரஸ்யமான விடயம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது, 16 வயதினிலே திரைப்படத்தில் முதலில் நாகேஷை தான் நடிக்க வைக்க திட்டமிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் ‘கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி வேடத்தில் நடிக்க தேர்வு செய்ததேன்.

அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும் போது தான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள்.

பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வு செய்தேன்’ என்றார்.

தமிழ் சினிமா பயணத்தில் கமல்ஹாசன், ரஜினி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூவருக்குமே ஒரு முக்கிய படமாக இருந்தது 16 வயதினிலே. இப்படத்தில் கமல்ஹாசனின் சப்பானி வேடம் மக்களிடம் அதிகம் பேசப்பட்டது அனைவரும் அறிந்ததே.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com