பாம்பாக மிரட்டும் ‘பாம்பன்’ சரத்குமார் -மிரட்டும் புதிய போஸ்டர் உள்ளே

பிரபல அரசியல் கட்சித்தலைவரும் , நடிகருமான சரத்குமார் நடித்து வரும் ‘பாம்பன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

அரசியலில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் நடிகர் சரத்குமார், தற்போது ‘பாம்பன்’ என்னும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கும் இப்படத்தில் முக்கிய சினிமா பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.

இதனிடையே சமீபத்தில், வெளியான பாம்பன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வித்தியாசமான முறையில், பாம்பின் கண்களோடு சரத்குமாரின் மிரட்டும் பார்வைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பாம்பை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் பாடல் பதிவு இன்று முதல் துவங்கப்படுவதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாம்பாக மிரட்டும்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]